வவுனியாவில் போதை மாத்திரைகள் மீட்பு

414 0

வவுனியா ஒமந்தையில் 1670 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக ஒமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒமந்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு சென்ற பஸ் ஒன்றை ஒமந்தை பகுதியில் வைத்து சோதனை செய்த போது இப் போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை குறித்த போதை மாத்திரை கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஒமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment