சட்ட விரோத துப்பாக்கிகளுடன் நேற்று கைது செய்யப்பட்ட ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாவனல்லை தொகுதி அமைப்பாளர் இம்தியாஸ் காதரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி அவரை நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்ட விரோத துப்பாக்கிகளை வைத்திருந்தமை தொடர்பில் சுதந்திர கட்சியின் மாவனல்லை தொகுதி அமைப்பாளர் இம்தியாஸ் காதர் நேற்று பொலிஸ் விசேட அதிரடிப்படியினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

