பாதுகாப்பு படைகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணவர்தனவை அடுத்த வாரத்திற்குள் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைப்பதற்கு அழைப்பாணை தயாரிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் குற்றப்புலனாய்வு திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
இதேவேளை பாதுகாப்பு படைகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணவர்தனவை கைது செய்வதற்கு தேவையான காரணிகள் இருப்பதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் 11 இளைஞர்களை கடத்தி காணாமல் செய்தமை தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையிலேயே குற்றப்புலனாய்வு பிரிவினர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளனர்.

