சம்மாந்துறை பிரதேசத்தில் தம்வசம் வலம்புரிச் சங்கு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும், எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம். பஸீல் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து புதன்கிழமை (17) மாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக சம்மாந்தறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம். பஸீல் முன்னிலையில் வியாழக்கிழமை (18) ஆஜர் செய்த போது எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.சம்மாந்துறைப் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்

