கிளிநொச்சி தீ விபத்து. பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை இல்லை

357 0

1100270833untitled-1கிளிநொச்சியில் தீயினால் கடைகள் எரிந்தமையால் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் தொடர்பில் பிரதமர் நடவடிக்கை எடுக்காதமை எமக்கு கவலை அளிப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் 62 ஆவது அமர்வு நேற்றைய தினம் நடைபெற்றது. அதன் போதே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் , கிளிநொச்சி கடைத்தொகுதி கடந்த வெள்ளிக்கிழமை தீ விபத்தினால் எரிந்து நாசமானது. அது தொடர்பில் மறுநாள் சனிக்கிழமை யாழ்ப்பணத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு வந்தேன். இதுவரையில் அது தொடர்பில் பிரதமர் எந்த பதிலும் எமக்கு அளிக்கவில்லை.

இந்த தீ அனர்த்தம் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கும் தெரியப்படுத்தி அறிக்கை சமர்ப்பித்து உள்ளோம். அவர்களும் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை.

எனக்கு ஒரு தகவல் தரப்பட்டது. அனர்த்த முகாமைத்துவத்தினால், இயற்கை அனர்த்தத்திற்கு மாத்திரமே, நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கிளிநொச்சியில் நடைபெற்ற அனர்த்தம் மின் ஒழுக்கினால் ஏற்பட்டது. எனவே அது செயற்கை அனர்த்தம் எனவும், அதனால் அனர்த்த முகாமைத்துவம் நடவடிக்கை எடுக்காது என தெரிவிக்கப்பட்டது என முதலமைச்சர் தெரிவித்தார்.