ஒரு மணி நேரத்துக்கு மேலாக ‘யூ டியூப்’ இணையதளம் திடீரென முடங்கியது!

240 0

அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணம், சான்புரூனோ நகரை தலைமையகமாக கொண்டு யூ டியூப் இணையதளம் இயங்கி வருகிறது. இது கூகுள் இணையதள நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆகும்.

படக்காட்சிகளை காண்பதற்கும், பதிவேற்றம் செய்வதற்கும் இணையதள ஆர்வலர்களுக்கு யூ டியூப் இணையதளம், ஒரு வரமாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இரவில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த இணையதளம் திடீரென முடங்கிப்போய் விட்டது. படக்காட்சிகளை காணவும் முடியவில்லை. பதிவேற்றம் செய்யவும் இயலவில்லை. இதனால் இணையதள ஆர்வலர்கள் திண்டாடி விட்டனர். இந்தப் பிரச்சினை சரி செய்யப்பட்டு விடும் என அந்த நிறுவனம் வாக்குறுதி அளித்தது.

அதன்படி பிரச்சினை சரி செய்யப்பட்டு, யூ டியூப் இணையதளம் மீண்டும் செயல்படத்தொடங்கியது. அதன்பின்னர்தான் இணையதள வாசிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

யூ டியூப் இணையதளம் முடங்கியதற்கு காரணம் தொழில்நுட்பக்கோளாறு என தெரிய வந்தது.

Leave a comment