ஆயுதபூஜை இன்று கொண்டாட்டம்: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

9 0

ஆயுதபூஜை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-
மனித சமுதாயத்திற்கு அடிப்படை தேவைகளாக இருக்கின்ற வீரம், கல்வி, செல்வம் ஆகிய மூன்றையும் அள்ளி வழங்குகின்ற மாபெரும் சக்திகளான துர்கா, சரஸ்வதி, லட்சுமி ஆகியோருக்கு நமது நன்றியையும், வணக்கத்தையும், வேண்டுதலையும் தெரிவிக்கும் விழாவாக 9 நாட்கள் நவராத்திரி நாட்களாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இவ்விழாவை குடும்ப விழாவாக கொண்டாடிவரும் கோடிக்கணக்கான மக்களுக்கு இனிய 10-ம் நாள் விஜயதசமி திருநாளான வெற்றித் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
டி.டி.வி.தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-
சிறப்புமிக்க ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி திருநாளில் இறைவனின் அருள்பெற்று, அனைவரும் தங்கள் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி கண்டு, துன்பங்கள் யாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைத்து, நல் வெற்றிக்கு தொடக்கமாக இத்திருநாட்கள் அமைந்திடவும், நாட்டிலும் மக்கள் வாழ்விலும் கரைகள், குறைகள் அத்தனையும் அகன்று, நிறைவான வெற்றியை அள்ளித்தரும் நற்காலம் தொடங்கிடும் பொன்நாட்களாக, இனிவரும் நாட்கள் அமைந்திட அம்பிகையை வணங்கி, எல்லா வளங்களையும், நலன்களையும் பெற்று பெரும் மகிழ்ச்சியுடன் மக்கள் அனைவரும் வாழ்ந்திட எனது மனமார்ந்த ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோல், புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், மக்கள் தேசிய கட்சியின் மாநில தலைவர் சேம.நாராயணன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா ஆகியோரும் ஆயுதபூஜை வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Related Post

சபரிமலை சீசனை முன்னிட்டு சென்னை-கொல்லம் இடையே சிறப்பு கட்டண ரெயில்கள்

Posted by - November 8, 2017 0
சபரிமலை சீசனை முன்னிட்டு சென்னை-கொல்லம் இடையே சிறப்பு கட்டண ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. சேலம் கண்ணன் மரணம்

Posted by - September 18, 2016 0
சேலம் திருவாக்கவுண்டனூர் பழனியப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் பி.கண்ணன் (வயது 78), வக்கீல். எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கும் போது கண்ணன் முக்கிய பங்காற்றினார். மேலும் அவர் சேலம்…

மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை நடை திறப்பு

Posted by - February 11, 2017 0
மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை நடை திறக்கப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைகள் மற்றும் ஒவ்வொரு மலையாள மாதத்தின்…

மீனவர்கள் குறித்த அமைச்சு மட்ட பேச்சு வார்த்தை கொழும்பில் இடம்பெற்றது.

Posted by - January 2, 2017 0
மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமான மற்றுமொரு உயர் மட்ட பேச்சு வார்த்தை இன்று கொழும்பில் இடம்பெற்றது. இந்திய அமைச்சர் ராதா மோகன் சிங் மற்றும்…

பெரிய கட்சிகள் வதந்தி பரப்புகின்றன: வைகோ

Posted by - December 9, 2016 0
ஜெயலலிதா மரணம் பற்றி பெரியகட்சிகள் வதந்தி பரப்புவதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். காஞ்சீபுரத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ…

Leave a comment

Your email address will not be published.