தண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

192 0

உயர் நீதிமன்ற உத்தரவால் நிலத்தடி நீர் எடுப்பது பாதிப்பதாக கூறி குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் துவங்கியுள்ளதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வணிக நோக்கத்துடன் நிலத்தடி நீரை எடுக்க உயர் நீதிமன்றம் தடை விதித்தது இதனால் 1400 கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளனர். இன்று மாலை 6 மணியுடன் உற்பத்தியை நிறுத்துவதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் நிர்வாகி முரளி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அக்டோபர் 3 அன்று உயர் நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பின் விளைவாக நிலத்தடி நீர் எடுக்கும் நிறுவனங்களுக்கு 65 70 % நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் உள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவு சில இடங்களில் எடுக்கக்கூடாது என்கிற உத்தரவை ஏற்றும் இன்று முதல் வேலை நிறுத்ததில் ஈடுபட உள்ளோம்.

குடி தண்ணீருக்காக எடுக்கின்ற நிலத்தடி நீருக்கு அனுமதி கொடுக்க வேண்டும். எந்தவிதமான தடைகளும் கூடாது என்று சொல்லவில்லை. நிலத்தடி நீர் குடி தண்ணீருக்காக எடுக்க அனுமதிக்க வேண்டும். தோல் பதனிடும் தொழிலுடன் குடிதண்ணீருக்காக நீரை எடுப்பதை இணைப்பது எப்படி சரியாக இருக்கும். மாற்றம் வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்து வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளோம்.

பன்னாட்டு நிறுவனங்கள் 100 ரூபாய்க்கு ஒரு கேன் விற்பனை செய்கின்றனர். குடிநீர் ஒரு வாரத்தில் 100 ரூபாய் அளவுக்கு போய்விடும். அடுத்த 24 மணி நேரத்திலிருந்து 48 மணி நேரத்திற்குள் நடக்கும். இது அரசின் கையில்தான் உள்ளது. 142 அரசின் தடையணையை நீக்க வேண்டும் அல்லது குடிநீர் தேவைக்காக தண்ணீர் எடுக்க சலுகை அளிக்க வேண்டும் எனவும் கூறினார்.

சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் பொதுமக்கள் பெரும்பாலானோர் அடைக்கப்பட்ட குடிநீரைத்தான் பயன்படுத்துகின்றனர். திடீர் வேலை நிறுத்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Leave a comment