ஜெயலலிதா மறைந்த வழக்கு விசாரணைக்கு வரும் நபர்களின் பின்புலத்தை அறிய இன்ஸ்பெக்டர் தேவை: ஆறுமுசாமி ஆணையம்

230 0

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜராகுபவர்களின் பின்புலங்களை அறிய இன்ஸ்பெக்டர் ஒருவரை நியமிக்க கோரி தமிழக அரசை விசாரணை ஆணையம் வலியுறுத்தியுள்ளது. ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் சார்பில் 107 பேரிடம் இதுவரை நீதிபதி ஆறுமுகச்சாமி விசாரணை நடத்தியுள்ளார். இன்னும் பலரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இந்த நிலையில், ஆணையத்திற்கு 4 மாதம் கால அவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில்   கடந்த ஜூலை மாதம் அரசுக்கு எழுதிய கடிதத்தில் காவல் ஆய்வாளர் நியமிக்க வலியுறுத்தி இருந்தும் இன்னும் நியமிக்கப்படவில்லை என்பது குறித்தும் தற்போது எழுதிய கடிதத்தில் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த கடிதத்தில் ஏன் ஆணையத்தில் இன்ஸ்பெக்டரை நியமிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளது.

அந்த விளக்கத்தில், விசாரணைக்கு ஆஜராகுபவர்களின் பின்புலங்களை ஆணையம் தெரிந்து கொள்வதற்கும், சில சாட்சிகளை விசாரிப்பதற்கும் காவல் ஆய்வாளர் ஆணையத்திற்கு தேவைப்படுவதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராகுபவர்கள் அளித்த வாக்குமூலத்தில் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து நடந்த நிகழ்வுகளில் தொடர்புடையவர்கள் என பல பெயர்களை ஆணையம் அடையாளம் கண்டுபிடித்துள்ளது. போயஸ் கார்டனில் பணிபுரிந்தவர்களின் முழு விபரங்களை இன்னும் ஜெயலலிதா உதவியாளராக இருந்த பூங்குன்றன் தெரிவிக்கவில்லை.குறிப்பாக போயஸ் கார்டனில் செப்டம்பர் 22 ம் தேதி முதல் தளத்தில் இருந்த இரண்டு பணிப்பெண்கள் யார் அவர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்ற விவரங்கள் ஆணையத்திற்கு கிடைக்கவில்லைபணிப்பெண்களுக்கு சம்மன் அனுப்ப அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை விசாரிப்பதற்கு காவல் ஆய்வாளர் தேவை என்று ஆணையம் தனது கடிதத்தில் சுட்டி காட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

Leave a comment