கூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் கடுமையான உழைப்பு மாத்திரமே சுரண்டப்படுகின்றது. தேசிய அரசாங்கம் தோற்றம் பெற மலையக மக்கள் பிரதான பங்கு வகித்தனர். ஆனால் இன்று அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் பின்வாங்குகின்றது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.பி ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

 

மலையகத்தில் இன்று பொய்யான அபிவிருத்திகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டுள்ளன. நிர்மாணிக்கப்பட்டுள்ள  குடியிறுப்புக்களும் அம்மக்களின்  விருப்பத்திற்கு முரணாகவே  அமைக்கப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் கட்சி காரியாலயத்தில்  இன்று  திங்கட்கிழமை  இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு   குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் பெற்றுத்தர வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட கூட்டு ஒப்பந்தம் தொழிற்சங்கத்தினரதும், முதலாளிமார் சம்மேளனத்தினரது  தனிப்பட்ட  நலன்களை மாத்திரமே நிறைவேற்றியுள்ளது. இதற்காக அப்பாவி மக்களின் கடுமையான உழைப்பு தொடர்ந்து பொய்யான வாக்குறுதிகளால்  சுரண்டப்பட்டுள்ளது.  இன்றும் சுரண்டப்படுகின்றது.