அரசாங்கத்திலிருந்து சுதந்திரக்கட்சி வெளியேற வேண்டுமென்ற எழுத்து மூலமான கோரிக்கையை அரசாங்கத்திலிருந்து பிரிந்து சென்ற 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்வைக்கவுள்ளனர் என முன்னாள் அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திலிருந்து பிரிந்து சென்ற 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பில் ஒருமித்த தீர்மானத்தை எடுத்துள்ளனர் என தெரிவித்துள்ள அவர் தங்கள் கோரிக்கையை எழுத்து மூலம் ஜனாதிபதியிடம் வழங்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்துள்ளனர் என தெரிவித்துள்ள சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தொடர்ந்தும் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்க முடியாது என்ற தீர்மானத்தை எடுத்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து விலகாவிட்டால் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் பங்கேற்பது குறித்து தீர்க்கமான முடிவை நாங்கள் எடுக்கவேண்டியிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியிடம் இது குறித்து தெளிவுபடுத்தவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்

