அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கிடையாது- மஹிந்த

368 0

மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடாத்துவது எனத் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கிடையாது என ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள எல்லை நிர்ணய மீளாய்வு குழுவின் அறிக்கை வெளியானதன் பின்னரே மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து ஒரு நிலைப்பாட்டுக்கு வர முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எல்லை நிர்ணய அறிக்கை மட்டும் மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு போதியதன்று எனவும், தற்பொழுதுள்ள மாகாண சபைகள் சட்டத்தில் பல சீர்திருத்தங்களை முன்வைக்கப்பட வேண்டியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா நேற்று ஊடகங்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment