எரிபொருள் விலை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லுமாயின் பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு சலுகை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக் அபெசிங்க தெரிவித்தார்.
குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே பிரதி அமைச்சர் இதனைக் கூறினார்.

