சிலாபம் நகரில் அமைந்துள்ள உணவகத்தில் இன்று பகல் 1.15 மணியளவில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அரிசி வேகவைக்கும் அடுப்பில் ஏற்பட்ட எரிவாயு கசிவினால் தீ பரவி, தீயை கட்டுப் படுத்த முடியாமல் எரிவாயுத்தாங்கி (சிலிண்டர்) வெடித்துச் சிதறியுள்ளது.

சம்பவத்தின் போதே துரித கதியில் தீயணைப்புப் படையினர் பங்கேற்று தீயை முழுமையாக அணைத்துள்ளனர்.

உயிர் சேதங்களோ காயங்களோ ஏற்படாத போதும், பாரிய எரிவாயு அடுப்பு உட்பட பல சொத்துச் சேதம் ஏற்பட்டுள்ளதாக உரிமாயாளர் உட்பட ஊழியர்கள் தெரிவித்தனர்.


