அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நோர்வுட் நிவ்வெளிகம பகுதியில் மண்சரிவு அபாயம் தொடர்பாக அப்பகுதி மக்களை நேரில் சென்று பார்வையிட்டார் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொன்டமான்.குறித்த இச் சந்திப்பானது இன்று மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மண்சரிவினால் பாதிக்கபட்ட மக்களையும்,மண்சரிவு அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இடத்தையும் பார்வையிட்ட பிறகு தோட்ட மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுப்பட்டுள்ளார்.
இதன் போது பாதிக்கபட்ட 06 குடும்பங்களை சேர்ந்த 23பேருக்கும் மாற்று காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவிருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தெண்டமான் தெரிவித்தார்.
பாதிக்கபட்ட மக்களுக்கான மாற்று காணிகளை வழங்குவது தொடர்பில் குறித்த காணியினை தேசிய கட்டிட ஆய்வாளர்களின் அறிக்ககை சமர்பித்த பின்பு இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளபடுமென அவர் மேலும் குறிப்பிட்டார்

