 அனுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் இரண்டாம் தினமாகவும் தொடர்கிறது.
அனுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் இரண்டாம் தினமாகவும் தொடர்கிறது.
அங்குள்ள 25 அரசியல் கைதிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களின் விடுதலையை வலியுறுத்தியும், தங்களது வழக்கு விசாரணைகளை தமிழ் பிரதேசங்களில் உள்ள நீதிமன்றங்களில் முன்னெடுக்குமாறு கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதற்கு முன்னரும் அரசியல் கைதிகள் பல்வேறு தடவைகள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது அரசாங்கத்தினாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பினால் உறுதிமொழிகள் வழங்கப்பட்டமைக்கு இணங்க அவர்களின் போராட்டங்கள் கைவிடப்பட்டிருந்தன.
எனினும் அவர்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றபடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமையாலேயே மீண்டும் அவர்கள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
 
                        

 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            