உடுவில் கல்லூரி விவகாரம் மனித உரிமை ஆணைக்குழுவை மதிக்காத பிரதிப் பொலிஸ்மா அதிபர்

336 0

625-472-560-320-505-600-053-800-900-160-100உடுவில் மகளீர் கல்லூரி அதிபர் நியனம் தொடர்பில் எழுந்த பிரச்சினைகளின் போது பொலிஸாரின் அமசந்தப் போக்கு, அச்சுறுத்தும் வகையான செயற்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் கோரப்பட்டு 2 வாரங்கள் ஆகின்ற நிலையிலும் அதற்கான பதில் இன்னமும் வழங்கப்படவில்லை.
இதனால் குறித்த சம்பவங்களுக்கான விளக்கத்தினை வழங்குமாறு மீண்டும் வலியுறுத்தும் வகையில் கடிதம் ஒன்றினை பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
உடுவில் மகளீர் கல்லூரிக்கான பழைய அதிகர் நீக்கப்பட்டு புதிய அதிகர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் கடந்த 3 ஆம் திகதி முதல் பாடசாலை நிர்வாகத்திற்கு எதிராக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இவர்கள் மேற்கொண்டுவந்த போராட்டமானது கடந்த 7,8 ஆம் திகதிகளில் தீவரமடைந்திருந்தது. இந்நிலையிலணை கண்காணிப்பதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகுளும் சம்பவ இடத்திற்கு வருகைதந்திருந்தனர்.
இந்நிலையில் மாணவிகளின் போராட்டத்தின் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கான அங்கு அனுப்பப்பட்ட சுன்னாகம் பொலிஸ் நிலையத்தினைச் சேர்ந்த போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரி ஒருவர் மாணவிகளையும், அங்கு செய்தி சேரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தும் வகையில் கைத்தொலைபேசியில் புகைப்படும், வீடியோ பதிவுகளை மேற்கொண்டிருந்தார்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை ஆசிரியர்கள் தாக்கிய போது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளாமை, அது தொடர்பாக முறைப்பாடுகளை பதிவு செய்யாமை, இது தொடர்பில் ஆணைக்குழுவால் சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அறிவறுத்தல் வழங்கியும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாமை.
இரவு வேளையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவிகளுக்கு பெண் பொலிஸார் பாதுகாப்பு கடமைக்கு அமர்த்தப்படாமை தொடர்பில் ஆணைக்குவால் அவதானிக்கப்பட்டது.
மேலும் இவை தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளையும் கூட்டிகாட்டி மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்தயி இணைப்பாளர் கடந்த 10 ஆம் திகதி யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் பொலிஸாருடைய அசமந்தப் போக்கு மற்றும் அச்சுறுத்தும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுத்தமை தொடர்பில் விளக்கம் கோரப்பட்டிருந்தது.
இவ்வாறு விளக்கம் கோரப்பட்டு 2 வாரங்கள் ஆகின்ற நிலைலும் பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் இருந்து ஆணைக்குழுவிற்கு எந்தவிதமான விளக்கமும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் அதற்கான விளக்கத்தினை வழங்குமாறு மீண்டும் வலியுறுத்தும் வகையில் யாழ்.மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிகருக்காக அறிவித்தல் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.