எவன்காட் விவகாரத்தை விசாரிக்க தடை உத்தரவு நீடிப்பு

298 0

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கை கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரிக்க விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

எவன்காட் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையை பராமரித்துச் செல்வதற்காக அனுமதியளித்த காரணத்தினால் அரசாங்கத்திற்கு 1,140 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டுக்கு அமையவே அதற்கமைவாக கோத்தா உள்ளிட்ட 6 பிரிதிவாதிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந் நிலையில் இவர்கள் தொடர்பான மேற்கண்ட வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நீடிக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment