ஹெரோயினுடன் 2 பெண்கள் உட்பட ஐவர் கைது !

287 0

கொழும்பின்  பல்வேறுபட்ட பிரதேசங்களில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது ஹெரோயின் வைத்திருந்தமை தொடர்பில்  இரண்டு பெண்கள் உள்ளடங்கலாக  ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி சுற்றிவளைப்புக்கள் பொரளை, கல்கிசை, மட்டக்குளிய, மொறட்டுவ மற்றும் மருதானை ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.

பொரளை 

பொரளை -கதர்நாணவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 46 வயதுடைய  பொரளை பகுதியை சேர்ந்த சுவர்ணமாலி நொகொத் நோனா எனப்படும் பெண்ணெருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 3 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் பொதைப்பொருள்  கைப்பற்றப்பட்டுள்ளதுடன். சந்தேக நபர் நேற்றைய தினம்  மாளிகாகந்தை நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

கல்கிசை 

கல்கிசை – படோவிலட பிரதேசத்தில் ஊழல் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 32 வயதுடைய அதே பகுதியை சேர்ந்த துஷிகா கில்ஷானி எனப்படுபவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 2 கிராம் 260 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மட்டக்குளிய 

மட்டக்குளிய – றாவத்தை பகுதியில் அதே பகுதியை சேர்ந்த 51 வயதுடைய கறுணாறத்ன  காமினி எனப்படுபவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 60 கிராம் 900 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மொறட்டுவை 

மொறட்டுவை – கோறளவல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன்  மொறட்டுவை பகுதியை சேர்ந்த  28 வயதுடைய சுகத் ரங்க பிரனாந்து எனப்படுபவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து  29 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மருதானை 

மருதானை மேம்பாலத்திற்கு அருகில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது  35 வயதுடைய நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த புஸ்ப குமார த சில்வா எனப்படுபவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன்  சந்தேக நபரிடமிருந்து 3 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றபட்டுள்ளது.

சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment