கல்வியில் புதிய சீர்திருத்தம்: 21 வயதில் பட்டதாரி, 25 வயதில் கலாநிதி- அகில

312 0

பிள்ளைகளின் காலத்தை வீணடிக்காமல் 21 வயதில் பல்கலைக்கழக பட்டப் படிப்பையும், 25 வயதில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுக் கொள்ளும் விதத்தில் கல்வி முறைமையை மாற்றி அமைப்பது தனது ஒரே எதிர்பார்ப்பு என கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.

பரீட்சைகளுக்கிடைப்பட்ட காலப் பகுதியில், காலம் வீணாவதை தடுக்கும் விதத்தில் எதிர்வரும் காலத்தில் பரீட்சையை நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதன்படி, க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர் தர வகுப்புக்களுக்கான பரீட்சையை டிசம்பர் மாத்தில் நடாத்தி, அதே மாதத்தில் பெறுபேறுகளையும் வெளியிட தீர்மானித்துள்ளோம் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment