பாம்பன் இரயில் பாலத்திற்கு புதிய இரும்பு கேடர்கள்(காணொளி)

453 0

pampan-palam-punaramaipu-20-09-2016ph

103 ஆண்டு பழமைவாய்ந்த பாம்பன் இரயில் பாலத்தில் ஆறு கோடி ரூபா மத்தீப்பீட்டில் இரண்டாம் கட்டமாக கேடர்கள் பொருத்தும் பணி தீவிரமடைந்துள்ளது.
பாம்பன் இரயில்பாலத்தில் புதிய இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
1913ஆம் ஆண்டு இறுதியில் 5 ஆயிரம் தொன் சிமென்ட் 18 ஆயிரம் தொன் இரும்பு, இத்துடன் 18 ஆயிரம் தொன் சல்லி கற்களைக் கொன்டு இரசாயன கலவையின்றி 146 தூண்களைக் அமைத்தும், 270 அடி நீளமும்,100 தொன் எடை கொன்ட தூக்கு பாலத்தையும் உள்ளடக்கி பாம்பன் இரயில் பாலத்தின் பணி நிறைவடைந்தது .
இத்தகைய சிறப்பு வாய்ந்த இப்பாலத்தில் உப்புக்காற்றால் துருப்பிடித்து தண்டவாளம் மற்றும் அதனை தாங்கி நிற்க்கும் கேர்டர்கள் சேதமடைந்தது.
இதனையடுத்து தது இந்திய இரயில்வே பாலம் பராமரிப்புத்துறை மற்றும் பொறியாளாகள் குழு சேதமடைந்த இரும்புக்கேடர்களில் கடந்த ஆண்டு 13 கேர்டர்களை புதியதாய் மாற்றி அமைத்து வழங்கியது.
இந்நிலையில் தற்போது இன்று இரண்டாம் கட்டமாக ரூ ஆறு கோடி மதீப்பீட்டில் அரக்கோணத்தில் செயல்பட்டுவரும் இந்திய இரயில்வே துறைக்கு சொந்தமான நிறுவனத்தில் தயார் செய்யப்பட்ட துருப்பிடிக்காத 16 இரும்பு கேர்டர்களை பொருத்தும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது .
இப்பணியின்போது இரயில்போக்குவரத்து பாதிப்பு ஏற்படாவண்னம் பணி நடைபெற்றுவருவதாக இரயில்வேதுறை அதிகாரி தெரிவித்துள்ளார். நடுக்கடலில் அடியில் 50 க்கும் மேற்ப்பட்ட ஊழியர்கள் பணி செய்து வருவதை சுற்றுலாபயணிகள் ஆச்சரியத்தடன் பாhத்துச் செல்கின்மை குறிப்பிடத்தக்கது.