கிளிநொச்சி பொதுச்சந்தைக்கு அமைச்சர் மனோ கணேசன் விஜயம்(காணொளி)

437 0

mano-kilinochchi-visit-20-09-2016-pho

கடந்த 16ஆம் திகதி எரிந்த கிளிநொச்சி பொதுச்சந்தையை தேசிய சகவாழ்வு கலந்துரையாடல்கள் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன், இன்று மாலை நேரில் சென்று பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுடன் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டார்.
வர்த்தகர்கள் மத்தியில் அவர் கருத்துக்கூறுகையில், ‘இங்கு பல குறைபாடுகளை கேள்விப்பட்டேன். கடந்த கால ஆட்சியில் இந்த சந்தையில் பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. முறையான பிரதேச சபை உருவாக்கப்பட்ட பின்னும் கூட சர்வாதிகாரப்போக்கில் அப்போதைய ஆட்சியில் இந்த சந்தையை கையாண்டுள்ளார்கள்.
எரிவடைந்த கடைகள் கூட முறைமையில்லாமல் அமைப்பட்டு இருக்கிறது. தீ பரவியதற்கு அதுவும் ஒரு காராணமாக அமைந்திருக்கின்றது. கடந்தவற்றை விடுவோம். எதிர்காலத்தில் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி சம்பந்தப்பத்தப்பட்ட அதிகாரிகளுடனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோருடன் கலந்துரையாடி, உங்களுக்குக் கிடைக்கக்கூடிய உதவிகளை என்னால் செய்ய முடியும்.

நீங்கள் வங்கியில் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் பெற்ற கடன்களை குறிப்பிட்ட காலத்துக்கு ஒத்தி வைப்பதற்கான நடவடிக்கையை நிதி அமைச்சருடன் கலந்துரையாடி மேற்கொள்வேன்’ என்றார்.