எதிர்க்கட்சித் தலைவர் ஏன் உங்களைப் பார்க்க வரவில்லை?

305 0

20160920_102530கிளிநொச்சியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க இதுவரை ஏன் எதிர்க்கட்சித் தலைவர் வரவில்லையென பத்தரமுல்லையைச் சேர்ந்த சீலரத்தின தேரர் கேள்வி கேள்வியெழுப்பியுள்ளார்.

இன்று கிளிநொச்சி தீவிபத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களுக்கு உலர் உணவு வழங்கிவைத்ததன் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நான் இனவாதம் பேச வரவில்லை. பாதிக்கப்பட்ட உங்களின் நிலமை தொடர்பாக உரியவர்களின் கவனத்திற்கு எடுத்துச்செல்வேன். உங்களுக்கு உதவி செய்யுமாறு கூறுவேன். நான் இனவாதம் பேச வரவில்லை. உங்களால் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவுசெய்யப்பட்டவர்கள் உங்களுக்கு உதவி செய்யவேண்டும். டக்ளஸ்தேவானந்தா உங்களின் வாக்குகளைப் பெற்று வந்தார். ஆனால் அவர் உங்களைப் பார்க்க வரவில்லை. அதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்துக்காக கத்தினார். இப்போது எதிர்க்கட்சி ஆசனத்தில் ஏறியதும் உங்களை வந்து பார்க்கவில்லை.

இன்று அரசியலில் உள்ளவர்களின் உறவினர்கள் யுத்த காலத்தில் பாதிக்கப்பட்டவர்களா? யாருடைய உறவினராவது யுத்தத்தில் உயிரிழந்துள்ளார்களா? அக்காலத்தில் அரசியல்வாதிகள், சுகபோக வாழ்க்கையை அனுபவித்தார்கள். இன்று யுத்தத்தினால் அனைத்தையும் இழந்த நீங்கள் இன்று மீண்டும் இழப்பினை சந்தித்துள்ளீர்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.