இன்று காலை விசேட மேல் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜரான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
டி.ஏ. ராஜபக்ஷ நினைவு கூடத்தை நிர்மாணம் செய்த போது 48 மில்லியன் அரச நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சியமளிக்க அவர் இன்று விசேட மேல் நீதிமன்றத்துக்கு சமூகமளித்திருந்தார்.
இதன்போது மூன்று பேர்கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணை செய்யப்பட்டபோதே பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

