ஹபராதுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு 8.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரினால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கி சூட்டினை மேற்கொண்ட நபர் அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.குறித்த துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்த நபர் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளார்.
ஹபராதுவ, கொக்கல பகுதியை சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

