கலஹா வைத்தியசாலையை மீண்டும் திறக்குமாறு மக்கள் ஆர்ப்பாட்டம்

323 0

குழந்தையொன்று உயிரிழந்த சம்பவத்தினால் கால வரையறையின்றி மூடப்பட்டிருக்கும் கலஹா வைத்தியசாலையை மீண்டும் திறக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி கிராமவாசிகள் இன்று (02) கலஹா நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 28 ஆம் திகதி முதல் இதுவரையில் வைத்தியசாலை மூடப்பட்டதன் காரணமாக பொது மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாக கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர்கள் வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டதன் விளைவாக வைத்தியர்கள் இல்லாத நிலையில் வைத்தியசாலையை மூடி வைத்துள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வைத்தியசாலை மூடப்பட்டுள்ளதனால், அவசர சிகிச்சை பெறவேண்டியுள்ள நோயாளி ஒருவர் 10 கிலோமீற்றர் தூரம் சென்று தெல்தொட்ட வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக் காரர்கள் முறைப்பட்டுள்ளனர்.

Leave a comment