ரயில் ஊழியர்களது சம்பள பிரச்சினையை ஆராய குழு!

254 0

ரயில் ஊழியர்களது சம்பள பிரச்சினையை ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப் பேச்சாளாருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவத்தார்.

அரச தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்தக் குழு இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

முன்னைய அரசாங்கம் அரச ஊழியர்களின் சம்பள அளவு மட்டங்களை 134 இலிருந்து 30 வரை குறைத்தது. அமைச்சுகளுக்கு மத்தியில் சம்பள ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்டன. சமகாலத்தில் ஒரு பிரிவினருக்கு மாத்திரம் சம்பள அதிகரிப்பை வழங்க முடியாதென சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப் பேச்சாளாருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெவரிவித்தார்.

எதிர்காலத்தில் மேலும் 36 வகை மருந்துப் பொருட்களின் விலை குறைக்கப்படும். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கழிவுகளை அப்புறப்படுத்தும் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கலஹ மருத்துவமனை சம்பவம் பற்றி சீரான விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

காணி அபிவிருத்தி பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க உரையாற்றுகையில் வடக்கு கிழக்கு பிரச்சனைகள் பற்றி பேசுவதற்காக ஜனாதிபதி விசேட செயலணியை நியமித்துள்ளதாக தெரிவித்தார்.

Leave a comment