திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம்

333 0

திருகோணமலை மாவட்டம் பட்டிணமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கப்பல் துறை கிராம மக்கள் தங்களது குடியிருப்பு காணிகளை அத்துமீறு எல்லை போடுவதை உரிய அரச அதிகாரிகள் நிறுத்த வேண்டும் எனக்கோரி இன்று (29) திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களது குடியிருப்பு பகுதிகளில் கிணறு, வீடு அமைத்து சுதந்திரமாக வாழ விடு என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

தங்களது மதக் கடமைகளை நிறைவேற்றும் அப்பகுதியில் உள்ள அல் அக்ஸா பள்ளி காணிக்குள்ளும் எல்லையிடப்பட்டுள்ளன இதனை உரியவர்கள் நிறுத்தி தாங்கள் சுதந்திரமுள்ளவர்களாக வாழ வழி விடுங்கள் எனக்கோரியும் கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இன்றைய தினம் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றுக் கொட்டிருந்த சந்தர்ப்பத்தில் இக் கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.

மாவட்ட செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்களை உள் நுழைய விடாது பொலிஸார் தடுத்து நிறுத்தியதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Leave a comment