கலஹா வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற பதற்ற நிலை தொடர்பில் ஒழுங்கான விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சுகாதார சேவை பணிப்பாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
நேற்று கலஹா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்ததையடுத்து வைத்தியசாலை வளாகத்தில் பதற்றநிலை உருவாகியிருந்ததுடன் வைத்தியசாலை உடைமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

