தனியார் பஸ் மீண்டும்வேலை நிறுத்தம்

305 0

அதிகரிக்கப்பட்டிருக்கும் பஸ் தண்டப்பணங்களை குறைக்குமாறு கோரியமைக்கு அரசாங்கத்தினால் சரியான பதில் கிடைக்காதமையின் காரணமாக எதிர்வரும் 15ம் திகதி முதல் தமது சங்கங்களின் கீழுள்ள பஸ்களை சேவையிலிருந்து நிறுத்தப்போவதாக அகில இலங்கை தனியார் பஸ் சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தண்டப்பணம் அதிகரிக்கப்பட்டமை உள்ளிட்ட மேலும் பல காரணிகளை உள்ளடக்கி பஸ் சேவை ஊழியர்களும் குறித்த தினத்திலிருந்து பனி பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் பிரதான செயலாளர் அஞ்சன ப்ரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கப்பட்ட தண்டப்பணங்களை குறைப்பதற்கு அரசுக்கு 14 நாட்கள் கால அவகாசம் இருப்பதாகவும் குறித்த தினத்திற்குள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் இந்த செயற்பாட்டை தொடர்ந்தும் முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தண்டப்பணம் அதிகரிக்கப்பட்டிருப்பதன் காரணமாக பஸ்களில் சாரதிகள் இல்லாதிருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்படவேண்டிய தவறுகளுக்கு சில பொலிஸார் தண்டப்பணம் அரவிடுவதே இதற்கான காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி எதிர்வரும் 15ம் திகதி இடம்பெறும் வேலைநிறுத்தத்திற்கு ஏனைய பஸ் சங்கங்களின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ள உத்தேசித்திருப்பதாக அகில இலங்கை தனியார் பஸ் சங்கங்களின் பிரதான செயலாளர் அஞ்சன ப்ரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

Leave a comment