இராணுவ கடற்படை மற்றும் விமானப்படைகளின் இலங்கைக்கான ரஷ்ய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் டெனிஸ் ஐ ஷ்கோடர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கபில விஜயரத்ன ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையே சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த சந்திப்பை நினைவு கூறும் வகையில் சந்திப்பின் இறுதியில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.

