வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டால் மீண்டும் விடுதலை புலிகள் தோன்றுவர்- விஜித

180 0

யுத்தம் முடிவடைந்த பின்னரும் வடக்கு மக்களின் காணிகளை இராணுவம் கையகப்படுத்தி வைத்திருப்பது   ஏற்புடையதல்ல . பாதிக்கப்பட்ட மக்களின் பூர்வீக காணிகளை அரசாங்கம் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

வடக்கில் உள்ள  இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் அரசாங்கம் விரைவில் மாற்று வழிமுறைகளை கையாள வேண்டும் என  பாராளுமன்ற உறுப்பினர்  விஜித ஹேரத் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்.

வடக்கு முதலமைச்சர் மற்றும் தெற்கின் சில அரசியல்வாதிகளும் தொடர்ந்து இனவாதம் பேசி அரசியல் செல்வாக்கு செலுத்துகின்றனர். இவ்விடயம் ஒன்றும் புதிதல்ல வடக்கு முதலமைச்சரின் பிரதான கோரிக்கை  வடக்கு மக்களின் காணி விடுவிப்பு விடயத்திலே தங்கியுள்ளது.   இந்திய மீனவர்கள் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுப்படுவது தொடர்பில் இவர் இதுரையில் எவ்விதமான கருத்துக்களையும்  குறிப்பிடவில்லை. இவர்கள் குறுகிய வட்டத்தில் இருந்துக கொண்டே  செயற்படுகின்றனர்.

இராணுவம் வடக்கு மக்களின் காணிகளை தொடர்ந்து விடுவிக்காமல் இருப்பிது பாதிக்கப்பட்ட மக்களினை மேலும்  பாதிப்புற செய்யும் விடயமாவே காணப்படுகின்றது. பொருளாதார ரீதியில் இம்மக்கள் தொடர்ந்து பின்னடைவதற்கு இதுவும் ஒரு காரணமாக காணப்படலாம். தேசிய  பாதுகாப்பு என்ற விடயத்தை  கூறிக் கொண்டு யுத்தம் முடிவடைந்த பின்னரும்  வடக்கில் இராணுவ  கட்டுப்பாடு நிலவுவது  வடக்கு மக்களை  பிரித்தாளுவதாகவே காணப்படுகின்றது.

அரசாங்கம் காணிகளை விடுவித்து விட்டதாக கூறுகின்றது ஆனால்  வடக்கு மக்கள் அது சர்வதேசத்தினை ஏமாற்றும் செயற்பாடு என்று குறிப்பிடுகின்றனர் . மக்களின் கருத்துக்கள் உண்மையாகவே காணப்படும் வடக்கு மக்கள் அரசாங்கத்திடம்  புதிய காணிகளை கோரவில்லை  அவர்களின் பூர்வீக காணிகளையே  கேட்கின்றனர். இது  இவர்களின் உரிமையாகவும் காணப்படுகின்றது.

தேசிய பாதுகாப்பு என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு அரசாங்கம் காணி விடுவிப்பினை வழங்காமல் காலம் தாழ்த்தி  வருவது தமிழ்    மக்களின்   மனங்களில்  பெரும்பாண்மையினர்  தொடர்பில்     வேற்றுமையினை  தோற்றுவிக்கும் .  விடுதலை புலிகளின் போராட்டம் 2009 ஆம் ஆண்டுடன் முடிவடைந்துவிட்டது.

ஆகவே யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட காணிகளை  இராணுவம் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு எவ்வித அவசியமும் ஏற்படவில்லை.

வடக்கில் காணிகளை அரசாங்கம் விடுவிக்கும் பொது தென்னிலங்கையில் உள்ள  சில இயக்கங்களும்,  எதிர் தரப்பினம் கடுமையாக எதிர்ப்பினை வெளிப்படுத்துகின்றனர்.   இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டால் மீண்டும் விடுதலை புலிகளின் இயக்கம் தோன்றும் என்று வதந்திகளை  பரப்பி  அரசியல் இலாபம் பெற்றுக் கொள்கின்றனர்..    வடக்கு மக்களின் விடயத்தில்  அரசியல் விடயங்களை மையப்படுத்தி செயற்படாமல் யதார்த்த  நிலைமைகளுக்கு முன்னுரிமை வழங்கி தீர்வு காணப்பட வேண்டும் . இவ்விடயத்திற்கு மக்கள் விடுதலை முன்னியிணனர்  ஆதரவினை  வழங்குவார்கள் என்றார்.

Leave a comment