எல்லை நிர்­ணய அறிக்கைமீது வெள்ளியன்று விசேட விவாதம்

348 0

மாகாண சபை­க­ளுக்­கான புதிய தேர்தல் முறை­மையின் எல்லை நிர்­ணய அறிக்கை மீதான விவாதம் வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெ­ற­வுள்­ள­துடன் அன்­றைய தினம் மாலை வாக்­கெ­டுப்பும் நடை­பெ­ற­வுள்­ளது.

இந்த வாக்­கெ­டுப்­புக்கு மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை அவ­சி­ய­மாகும். இதன்­படி நாடா­ளு­மன்­றத்தின் அதிக ஆச­னங்­களை கொண்ட கட்சி என்ற வகையில் எல்லை நிர்­ணய அறிக்­கைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிப்­பதா? அல்­லது எதி­ராக வாக்­க­ளிப்­பதா? என்­பது தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்சி நாளை வியா­ழக்­கி­ழமை இறுதி தீர்­மானம் எடுக்­க­வுள்­ளது.

எனினும் கட்­சி­யி­லுள்ள சிறுப்­பான்மை பிர­தி­நி­திகள் வாக்­க­ளிப்பிலிருந்து விலக கூடிய வாய்ப்பு அதி­க­மாக உள்­ள­துடன் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பங்­காளி கட்­சி­களின் பிர­தி­நி­திகள் எல்லை நிர்­ணய அறிக்­கைக்கு எதி­ராக வாக்­க­ளிக்க கூடும் என்றும் தெரி­ய­வ­ரு­கின்­றது.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் நாடா­ளு­மன்ற குழு கூட்டம் நாளை வியா­ழக்­கி­ழமை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நாடா­ளு­மன்ற கட்­ட­டத்­தொ­கு­தியில் உள்ள குழு அறையில் நடை­பெ­ற­வுள்­ளது.

மாகாண சபை­க­ளுக்­கான புதிய தேர்தல் முறை­மையின் எல்லை நிர்­ண­யத்தில் குள­று­ப­டிகள் நடந்­துள்­ள­தா­கவும் சிறுப்­பான்மை இன மக்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் கூறி புதிய தேர்தல் முறை­மைக்கு சிறு­பான்மை இனங்­களை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் கட்­சிகள் எதிர்ப்பு வெளி­யிட்­டுள்­ளன.

அதே­போன்று அர­சாங்­கத்தின் பிர­தான கட்­சி­களில் ஒன்­றான ஐக்­கிய தேசியக் கட்­சியும் தேர்தல் தாம­தாகும் எனில் பழைய முறை­மையின் கீழ் உடன் தேர்தல் நடத்த வேண்டும் என தீர்­மா­னித்­தி­ருந்­தது. பழைய முறை­மையின் பிர­கா­ர­மா­வது உடன் தேர்­தலை நடத்த வேண்டும் என்று கூட்டு எதி­ர­ணியும் வலி­யு­றுத்தி வரு­கின்­றது. எனினும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் பழைய முறை­மைக்கு மீண்டும் செல்­வது உகந்­தது அல்ல. ஆகவே புதிய முறை­மையின் கீழ் தேர்­தலை நடத்த வேண்டும் என வலி­யு­றுத்தி வரு­கின்­றன.

தேர்தல் முறைமை தொடர்­பாக பல தடவை கட்சி தலை­வர்கள் கூட்டம் இடம்­பெற்ற போதும் இணக்­க­பாடு எட்­டப்­ப­ட­வில்லை. இதனால் இறு­தி­யாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நடை­பெற்ற கட்சி தலைவர் கூட்­டத்தில் புதிய தேர்தல் முறை­மையின் எல்லை நிர்­ணய அறிக்­கையை வெள்­ளிக்­கி­ழமை விவா­தத்­திற்கு எடுத்து வாக்­கெ­டுப்பும் நடத்த தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

இதன்­படி எல்லை நிர்­ணய குழுவின் அறிக்­கையை மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்ற வேண்டும். அதா­வது சபைக்கு வருகை தராத பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுடன் சேர்ந்த மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை தேவை­யாகும். புதிய முறை­மைக்­கான எல்லை நிர்­ணய அறிக்­கைக்கு மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை இல்லை என்றால் பழைய முறை­மையை மீண்டும் நாடா­ளு­மன்­றத்­திற்கு கொண்டு வந்து அதனை நிறை­வேற்­று­வ­தற்கும் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை அவ­சி­ய­மாகும்.

இந்­நி­லையில் நாடா­ளு­மன்­றத்தில் அதிக ஆச­னங்­க­ளுக்கு உரித்­தான கட்­சி­யான ஐக்­கிய தேசியக் கட்­சியின் நிலைப்­பாடு எல்லை நிர்­ணய அறிக்­கையை நிறை­வேற்ற அவ­சி­ய­மாகும். ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஒரு சிலர் எல்லை நிர்­ணய அறிக்­கைக்கு எதி­ராக வாக்­க­ளிக்க கூடிய வாய்ப்­புகள் அதி­க­மாக உள்­ள­துடன் கட்­சியின் தமிழ், முஸ்லிம் நாடாளு­மன்ற உறுப்­பி­னர்கள் வாக்­க­ளிப்பில் இருந்து விலக கூடிய வாய்ப்பும் உள்­ளது.

ஆகவே புதிய தேர்தல் முறை­மைக்­கான எல்லை நிர்­ணய அறிக்­கைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிப்­பதா? அல்­லது எதி­ராக வாக்­க­ளிப்­பதா? என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி நாளை தீர்மானம் எடுக்கவுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வியாழக்கிழமை நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் கூடவுள்ள நாடாளுமன்ற குழு கூட்டத்தின் போதே குறித்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

எனினும் சிறுப்பான்மை கட்சிகள் எல்லை நிர்ணய குழு அறிக்கைக்கு எதிராக வாக்களிக்கவுள்ளமை குறிப்பிடதக்கது.

Leave a comment