கொழும்பின் சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு மற்றும் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோதரை, கொட்டாஞ்சேனை, ஜம்பெட்டா வீதி உள்ளிட்ட சில பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு மற்றும் கொலைகளுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

