முன்னாள் இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளரின் பிணை மனு நிராகரிப்பு

188 0

02 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இறக்குமதி ஏற்றுமதி திணைக்களத்தின் முன்னாள் இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் காமினி மககமகே தாக்கல் செய்திருந்த பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (21) நிராகரித்துள்ளது.

சந்தேக நபருக்கு பிணை வழங்குவதற்கு ஏதுவான காரணிகள் எதுவும் இல்லை என தெரிவித்த பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க, சந்தேக நபரை 4 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

அன்றைய தினம் விசாரணைகளின் அறிக்கையை சம்ர்பிக்கமாறும் அவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 வருடங்கள் பழமையான இரு வாகனங்களை சட்ட விரோதமான முறையில் விடுவிப்பதற்காக நபர் ஒருவரிடம் இருந்து 2 இலட்சம் ரூபா பணம் பெற்றுக்கொண்ட குற்றத்திற்காகவே அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment