தாமதமாகியுள்ள வழக்குகளை விரைவாக விசாரணை செய்யும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள மூன்று நீதிபதிகள் கொண்ட முதலாவது விசேட உயர் நீதிமன்றம் (trial at bar) நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துக்கோரலவினால் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.
தாமதமாகியுள்ள வழக்குகள் பல தேங்கிக் கிடப்பதாகவும் அவற்றை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் எனும் நோக்கில் இந்த விசேட நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

