பாணந்துரை ஊழல் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் இன்று (21) அதிகாலை 5.45 மணிக்கு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படை, தலைமையக அதிகாரிகள் குழுவுடன் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளைச் சம்பவம் ஒன்றின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தற்பொழுது கொழும்பிலுள்ள திட்டமிட்ட குற்றச் செயல் தடுப்புப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
வேலியே பயிரை மேயும் நிலைமை உருவாகியுள்ளதாக கூறப்படும் பொது மக்களின் கருத்துக்களை நிரூபிக்கும் ஆதாரங்களாக இச்சம்பவங்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

