மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள்

31 0

மன்னார் ‘சதொச’ வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலையுடன் இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த பணிகள் இன்று திங்கட்கிழமை காலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலையுடன்  மனித எலும்புகள் அகழ்வு பணிகள் இடை நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் இன்று திங்கட்கிழமை காலை 7.30 மணியளவில் 53 ஆவது நாளாக அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது.தற்போது வரை  66 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவற்றில் 56 மனித எலும்புக்கூடுகள் வெளியில் எடுக்கப்பட்டுள்ளது.விசேட சட்ட வைத்திய அதிகாரி ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையில் குறித்த அகழ்வு பணிகள் 53 ஆவது நாளாகவும் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.