மாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு

10 0

வவுனியாவில் வன்புணர்வின் பின் கொல்லப்பட்ட 14 வயது மாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் துஸ்பிரயோகத்தின் பின் படுகொலை செய்யப்பட்ட 14 வயது மாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு விசாரணை இன்று வவுனியா மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்ற நிலையில், அவ் வழக்கு விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் 26 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி பாடசாலை மாணவி ஹரிஸ்ணவி வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். திடீர் மரண விசாரணை அதிகாரியின் விசாரணை அறிக்கையில் ஹரிஸ்ணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டமைக்கான தடயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதன்படி சந்தேகதின் பேரில் அப்பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் வழக்கு விசாரணைகள் வவுனியா மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்று வந்தது.

சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து இது தொடர்பான குற்றப்பத்திர அறிக்கை இன்றும் வராத காரணத்தினால் குறித்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் 26 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சிறுமி மரணமாகி இரண்டரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் அச் சிறுமியின் மரணத்திற்கு நீதி கிடைக்கவில்லையென பெண்கள் அமைப்புக்கள் பலவும் கவலை வெளியிட்டுள்ளன.

Related Post

மைத்திரியின் பணியாளர் ஹோட்டலி மர்ம மரணம்!

Posted by - August 26, 2018 0
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பணியாளர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனியார் ஹோட்டலின் இரண்டாவது மாடியின் 11 வது அறையில் குறித்த நபர்…

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதி நினைவேந்தலுக்கு இடைக்கால தடை

Posted by - May 18, 2017 0
முல்லைத்தீவு- முள்ளிவாய்காலில் அருட்தந்தை எழில்ரஜன் ஒழுங்கமைத்திருந்த முள்ளிவாய்க்கா ல் நினைவேந்தல் நிகழ்வுக்கு பொலிஸார் 14 நாட்கள் தடை உத்தரவு பிறப்பித்திருப்பதாக தெரி யவருகின்றது. முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதிப்போரில்…

வவுனியாவில் இரு பொலிஸ் நிலையங்கள் நாளை திறப்பு

Posted by - October 14, 2016 0
வவுனியாவில் இரண்டு பொலிஸ் நிலையங்கள் நாளையதினம் திறந்துவைக்கப்படவுள்ளன. வவுனியா ஈச்சக்குளம் புதிய பொலிஸ் நிலையம் மற்றும் போகஸ்வௌ புதிய பொலிஸ் நிலையம் என்பன நாளை திறந்துவைக்கப்படவுள்ளதாக பொலிஸ்…

விடுதலை புலிகளின் பதுங்கு குழிகள் தோண்டல்

Posted by - June 30, 2016 0
கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் பதுங்குக்குழிகள் என்று கருதப்படும் பிரதேசத்தில் காவல் துறையினரால் தோண்டல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. வட்டக்கச்சி – இராமநாதபுரம் பகுதியிலேயே இந்த தோண்டல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.…

சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த பொலீஸ்அதிகாரிக்கு யாழ் முஸ்லீம்கள் அஞ்சலி

Posted by - July 26, 2017 0
கடந்த சனிக்கிழமை  யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் இடம்பெற்ற சூட்டு சம்பவத்தின் போது உயிரிழந்த பொலீஸ் உப பரிசோதகருக்கு யாழ்ப்பாணம் முஸ்லீம்களினால் அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று மதியம் ஐந்து…

Leave a comment

Your email address will not be published.