எதிர்வரும் இரண்டு வார காலத்திற்குள் 25 மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

 

மருந்துப் பொருட்களின் விலை குறைப்பு சுமார் இரண்டு பில்லியன் ரூபா அரச செலவினங்களை மீதப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

குறைக்கப்படவுள்ள 25 மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தொற்றா நோய் தொடர்பாக ஆராயும் பேரவை கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றும் போதே இதனைக் குறிப்பட்டார்.

குறித்த மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு வருடாந்தம் 7 பில்லியன் ரூபாவுக்கு அதிகமான தொகையை அரசாங்கம் செலவிட்டு வந்தது.

இதேவேளை, புற்றுநோய்க்கான 95 வீதமான மருந்து வகைகளின் விலைகளை அரசாங்கம் இதுவரை குறைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.