அமெரிக்க விவசாயிகள் பாதிக்கப்பட்டதற்குப் பரவாயில்லை- மஹிந்த

29 0

உள்நாட்டு விவசாயிகள் பாதுகாக்கப்படுமாயின் அமெரிக்காவிலுள்ள விவசாயிகளுக்கு சிறிது பாதிப்பு ஏற்பட்டதற்கு பரவாயில்லையென விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாப்பதற்கு கோதுமை மாவுக்கான வரியை அதிகரிக்கவுள்ளோம். அடுத்து வரும் போகத்தில் அருவடை செய்யப்படும் அனைத்து நெல்லையும் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக வேண்டி தனது அமைச்சு பெருமளவு நிதியை ஒதுக்கியுள்ளது. எந்தவிவசாயியும் பாதிக்கப்படாதவாறும், சிரமப்படாதவாறும் நெல் கொள்வனவு செய்யப்படும்.

இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் நெல்லுக்கு சந்தைவாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கு கோதுமை மாவுக்கு வரி விதிப்பது தவறாகாது என தான் கருதுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment

Your email address will not be published.