குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களை கொண்டு எம்.எஸ்சி. காலியிடங்களை நிரப்ப அவசியம் இல்லை!

9821 2,252

எம்.எஸ்சி. படிப்பில் காலி இடங்கள் இருக்கிறது என்பதற்காக குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஐதராபாத்தை சேர்ந்தவர் தாண்டேக் ரோகிணி என்பவர் சென்னை பாரதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எம்.எஸ்சி. விலங்கியல் படிப்புக்கு விண்ணப்பம் செய்தார். மதிப்பெண் குறைவாக பெற்றிருந்ததால் அவருக்கு இடம் வழங்க கல்லூரி நிர்வாகம் மறுத்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தாண்டேக் ரோகிணி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல், ‘இளங்கலை படிப்பில் 71 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே, முதுகலை படிப்பில் இடம் வழங்க முடியும். மனுதாரர் 61 சதவீத மதிப்பெண் மட்டுமே பெற்றிருப்பதால் அவருக்கு இடம் வழங்க முடியாது’ என்று வாதிட்டார்.

அதற்கு மனுதாரர் வக்கீல், ‘கல்லூரியில் எம்.எஸ்சி. விலங்கியல் படிப்பில் பல இடங்கள் காலியாக உள்ளன. எனவே மனுதாரருக்கு இடம் வழங்க உத்தரவிட வேண்டும்’ என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ‘எம்.எஸ்சி. படிப்பில் பல இடங்கள் காலியாக இருக்கிறது என்பதற்காக குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களை கொண்டு நிரப்பவேண்டும் என்ற அவசியம் இல்லை. இதை அனுமதித்தால் தவறான முன்னுதாரணமாகிவிடும். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.

Related Post

தினகரன் பக்கம் சாய முடிவா?: கண்காணிப்பு வளையத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

Posted by - December 28, 2017 0
ஆர்.கே நகரில் தினகரன் வெற்றி பெற்றதற்கு பல அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ரகசியமாக வாழ்த்து கூறியதாக முதல்வருக்கு புகார் வந்ததை அடுத்து அவர்கள் அனைவரும் கண்காணிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…

சிறையிலிருந்த பிரபல எழுத்தாளர் சௌபா காலமானார்!

Posted by - June 11, 2018 0
பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சௌபா,  உடல்நலக்குறைவு காரணமாக நேற்று நள்ளிரவு மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

30-ந் தேதி முதல் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்- ராமதாஸ்

Posted by - March 28, 2018 0
உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி, வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி 30-ந் தேதி முதல் போராட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக மக்களுக்கு ராமதாஸ்…

31 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி 38 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்

Posted by - June 23, 2017 0
30 நனோ கோள்கள் மற்றும் ‘கார்ட்டோசாட்– 2இ’ செயற்கைகோள் உடன் செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

லோக்சபாவில் மீண்டும் கச்சத்தீவு கோரிக்கை

Posted by - August 6, 2016 0
இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்கவேண்டும் என்று நேற்று இந்திய லோக்சபாவில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் உறுப்பினர் கே என் ராமசந்திரன் இந்தக்கோரிக்கையை விடுத்தார். கேள்வி…

There are 2,252 comments

  1. [url=https://motiliumtablets.com/]motilium[/url] [url=https://buyciproonline.com/]cipro[/url] [url=https://lasix20.com/]lasix 20[/url] [url=https://amoxicillinwithoutprescription.com/]buy amoxicillin no prescription[/url] [url=https://advairinhalers.com/]advair[/url]