பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு பேச்சுவார்த்தையில் இணக்கபாடு இல்லை

175 0

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இணக்கபாடு காணப்படாத நிலையில் தொழிற்சங்கங்கள் வெளிநடப்பு செய்துள்ளன.

கூட்டு ஒப்பந்தம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நிறைவடையும் நிலையில் புதிய ஒப்பந்தத்தின் நிமித்தம் இன்று (17) வெள்ளிக்கிழமை தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்குமிடையில் பேச்சுவார்த்ததை இடம் பெற்றது.

இந்த பேச்சுவார்ததையின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் மற்றும் பெருந்தோட்டக் கூட்டமைப்பின் தலைவர் ராமநாதன் ஆகியோரின் தலைமையிலான தூதுக்குழுவினர் பங்கேற்றிருந்தனர்.

பெருந்தோட்ட முதலாளிமார் சார்பில் முதலாளிமார் சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் கனிஸ்க வீரசிங்க, முகாமைத்துவ கம்பனிகளின் தலைவர் ரொசான் ராஜதுரை, உள்ளிட்ட தரப்பினர் கலந்து கொண்டனர்.

இன்றய பேச்சுவார்த்தைகளின் போது பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொகை தொடர்பிலோ ஏனைய சலுகைகள் தொடர்பிலோ எந்த இணக்கபாடும் ஏற்படவில்லை.

இந்நிலையில் தொழிலாளர்களுக்கு நியாயமான வேதன அதிகரிப்பு தொகை ஒன்றை முதலாளிமார் சம்மேளனம் முன்வைக்கும் வரையில் பேச்சுவார்த்தையை ஒத்திவைப்பதாக அறிவித்து தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment