
தாம் வெளியுறவு அமைச்சின் பரிசோதகர்கள் என தெரிவித்து குறித்த கடைக்குள் புகுந்த 4 கொள்ளையர்கள் அங்கு பாதுகாப்பு கடமையில் இருந்த நபருக்கு விளங்கிட்டுள்ளதுடன், கடையில் இருந்த ஒன்றரை இலட்சம் பணம், வாகன அனுமதிபத்திரம் மற்றும் 4 கோடி பெறுமதியான தங்க நகைகளையும் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கொள்ளையர்கள் தொடர்பில் முக்கிய இரகசியங்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாகவும்,விரைவில் இவர்களை கைதுசெய்ய எதிர்பார்ப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த தங்கநகை வர்த்தக நிலையத்தில் கடமைபுரியும் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

