பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் விடயத்தில் கல்வி அமைச்சின் முடிவே இறுதியானது – அமைச்சர் அகில

373 0

akila-viraj-kariyavasam-747445dமுதலாந்தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் விடயத்தில் கல்வி அமைச்சின் முடிவே இறுதியானது என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரங்களில் அரச வைத்தியர்களின் பிள்ளைகளுக்கு பிரபல பாடசாலைகளில் அனுமதி வழங்குமாறுக் கோரி அரச வைத்திய அதிகாரிகள் கல்வி அமைச்சிற்குள் அத்துமீறி பிரவேசித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தனர்.

இந்தநிலையில் பிரபல பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் போது தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக கல்வி சாரா ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

பிள்ளைகளை பாடசாலையில் சேர்த்துக்கொள்ளும் போது 5வீத ஒதுக்கீடு கல்வி சாரா ஊழியர் சங்கத்தின் பிள்ளைகளுக்கு வழங்குமாறு கல்வி அமைச்சின் சுற்று நிருபத்தில் வெளியிடப்பட்டுள்ள போதும் அந்த வாய்ப்பு தமது பிள்ளைகளுக்கு மறுக்கப்படுவதாக அவர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

அத்துடன் அரச வைத்தியர்கள் இடமாற்றம் பெறும் போது,அவர்கள் கோரும் பிரபல பாடசாலைகளை கல்வி அமைச்சு வழங்குமாயின் கல்வி சாரா ஊழியர்கள் தமது பிள்ளைகளுக்hக கோரும் பாடசாலையினை கல்வி அமைச்சு வழங்குவதில் தவறில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த விடயங்கள் தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம் வினவிய போதே அவர்முதலாந்தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் விடயத்தில் கல்வி அமைச்சின் முடிவே இறுதியானது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.