புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கு­ வ­தற்­கானமுயற்சி அவ்­வ­ளவு இல­கு­வா­னது அல்ல!

435 0

இனப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண்­ப­தற்கு அனைத்துத் தரப்­புக்­க­ளும் இணங்­கி­யுள் ளன. அதற்­கா­கப் புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கு­ வ­தற்­கான முயற்­சி­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அந்த முயற்சி அவ்­வ­ளவு இல­கு­வா­னது அல்ல. அதனை நிறை­வேற்­று­வது இலே­சான காரி­ய­மும் அல்ல.

இவ்­வாறு அமைச்­ச­ர­வைப் பேச்­சா­ள­ரும், அமைச் சரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார். யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் 3 அபி­வி­ருத்­தித் திட்­டங்­களை நேற்று அமைச்­சர் ஆரம்­பித்­தார். அதன்­பின்­னர் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

அவர் தெரி­வித்­தா­வது
இனப் பிரச்­சி­னையை முடி­வுக்கு கொண்டு வரு­வ­தற்கு அனைத்­துக் கட்­சி­க­ளும் சம்­ம­தம் தெரி­வித்­துள்­ளன. அதற்­காக புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது. அதைச் செய்­வது மிக இல­கு­வான காரி­யம் அல்ல.

இனங்­க­ளுக்­கி­டை­யி­லான வெறுப்­பு­ணர்­வு­க­ளுக்கு இட­ம­ளிக்­காது பிரச்­சி­னை­க­ளைப் பேசித் தீர்ப்­ப­தற்கு அனை­வ­ரும் பிர­தான அர­சி­யல் நீரோட்­டத்­தில் இணைந்து கலந்­து­ரை­யா­ட­லுக்கு முன்­வர வேண்­டும்.

2015ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்ட எமது அரசு வடக்­கில் கூடிய கவ­னம் செலுத்­தி­யி­ருந்­தது. தமிழ் மக்­க­ளின் வாழ்க்கை தரத்தை உயர்த்­து­வ­தற்­கா­கவே நாம் கூடிய கவ­ன­மெ­டுத்­தோம். இதுவே எமது கொள்கை. நாம் முன்­னைய அரசு போல அல்ல.

30 ஆண்­டுக்­குப் பின்­ன­ரான அபி­வி­ருத்தி இந்­தப் பகு­திக்கு தேவை என்­ப­த­னால் சுகா­தா­ரத் துறையை பொறுத்­த­வ­ரை­யில் அனைத்து உத­வி­க­ளை­யும் வழங்கி வடக்­கைக் கட்­டி­யெ­ழுப்­பி­யுள்­ளோம். உத­வி­களை வழங்­கு­வ­த­னூ­டாக இந்த மாகா­ணத்­தி­னை­யும் ஏனைய மாகா­ணத்தை போல அவற்­றின் தரத்­துக்கு கொண்டு வரு­வதே எமது நோக்­கம்.

வடக்­கி­லுள்ள பிரச்­சி­னை­களை கையாள்­வது தொடர்­பாக நாம், ஏற்­க­னவே உங்­க­ளுக்கு சுதந்­தி­ரத்­தை­யும், உரி­மை­யை­யும், சுயா­தீ­ன­மான செயற்­பாட்­டை­யும் வழங்­கி­யி­ருந்­தோம். வடக்­கில் உரி­மை­க­ளைக் கோரி போராட்­டம் நடத்­து­வ­தனை நான் தொலைக்­காட்­சி­க­ளில் பார்த்­துள்­ளேன்.

அந்த உரி­மை­கள் கிடைத்­தால் முத­லில் மகிழ்ச்­சி­ய­டை­வது நானா­கவே இருக்­கும்.

30 ஆண்­டு­க­ளுக்­குப் பின்­னர் அர­சுக்கு எதி­ராக போராட்­டங்­க­ளை­யும், கோசங்­க­ளை­யும், பணிப் புறக்­க­ணிப்­புக்­க­ளை­யும் முன்­னெ­டுப்­ப­தற்கு சந்­தர்ப்­பம் கிடைத்­துள்­ளது. இது தொடர்­பில் நான் மகிழ்ச்­சி­ய­டை­கின்­றேன்.

ஏனெ­னில் முன்­னர் இவ்­வா­றான போராட்­டங்­களை மேற்­கொண்­டால் இரா­ணு­வ­மும் பொலி­ஸா­ரும் அவற்றை அடக்கி விடு­வார்­கள். ஆனால் இப்­போது சிவா­ஜி­லிங்­கம் போன்­றோ­ரின் தலை­மை­யில் போராட்­டங்­கள் நடை­பெ­று­கின்­றன என்­றார்.
3

Leave a comment