முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியின் புதிய அரசியல் கட்சி அடுத்த சில தினங்களில் பதிவு செய்யப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடும் நோக்கில் புதிய கூட்டணி கட்சி ஒன்றை ஆரம்பிக்க கூட்டு எதிர்க்கட்சியினர் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
முன்னாள் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவில் புதிய கூட்டணி கட்சியை பதிவு செய்வது எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
புதிய கூட்டணி கட்சியை தொடங்கும் யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதுடன், அடுத்த சில தினங்களில் புதிய கூட்டணி கட்சி பதிவு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

