இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது சிறீலங்கா இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட யுத்தக்குற்ற மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பதிலளிக்க அரசாங்கம் தயாராகிவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
யுத்தக்குற்ற மீறல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச மட்டத்திலிருந்து சிறீலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வரும்நிலையில் அதனைப் பொய்யென்று நிரூபிக்கும் செயற்பாடுகளில் அரசாங்கம் இறங்கிவருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கு ஆதாரமாக, விடுதலைப்புலிகளின் அரசியல்துறை மகளிர் போராளி தமிழினியால் எழுதப்பட்ட ஓர் கூர்வாளின் நிழலில் என்ற நூலிலிருந்தும், அண்மையில் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவால் எழுதப்பட்ட நந்திக்கடலுக்கான பாதை என்ற நூலிலிருந்து சில தரவுகளும், அத்துடன் அடுத்த ஆண்டு சரத் பொன்சேகாவால் எழுதி வெளியிடப்படவுள்ள என்ற நூலிலிருந்தும் சில தரவுகள் திரட்டப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இறுதி யுத்தத்தில் இழைக்கப்பட்ட யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள்தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களும், மனித உரிமை அமைப்புக்களும் தொடர்ச்சியாக கண்டனங்கள் தெரிவித்துவரும் நிலையில் முன்னைய அரசாங்கம் இதற்குப் பதிலளிக்கத் தவறியிருந்த நிலையில், தற்போதைய அரசு அதற்குப் பதிலளிக்கும் முகமாகவே இத்தகயை தகவல்களைத் திரட்டிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

