நாட்டின் வருமானம் 10 சதவீதத்தால் அதிகரிப்பு-ரணில்

301 0
நாட்டின் வருமானத்தை 10 சதவீதத்தால் அதிகரிக்க முடிந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் படுகடனை வரவு செலவுத் திட்டத்தின் 70 சதவீதமாக மட்டுப்படுத்தவது 2020 ஆம் ஆண்டுக்குரிய இலக்காகுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

´மூச்செடுக்க மூன்று வருடங்கள்´ என்ற தொனிப்பொருளின் கீழ் குரநாகலில் பூர்த்தி செய்யப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் பிரதமர் தலைமையில் மக்கள் பாவனைக்கு ஒப்படைக்கப்பட்டன.

´மூச்செடுக்க மூன்று வருடங்கள்´ என்ற தொனிப்பொருளின் கீழ் பாரிய குருநாகல் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம் சீன மற்றும் இலங்கை அரசாங்கத்தின் 15,500 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் குருநாகல் மாவட்டத்தில் 27 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 45,000 பேர் பயனடையவுள்ளனர்.

கழிவு நீரை சுத்திகரிப்பதற்காக இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது திட்டமாகும்.

இத்திட்டத்தின் மூலம் குருநாகல் நகரை சூழவுள்ள நிலத்தடி நீர் சுத்தமடைவதுடன் கழிவு நீரினால் ஏனைய நீர் வளங்கள் பாதிப்படைவதும் முற்றாக தடுக்கப்படுகின்றது.

இந்நிகழ்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான சீனத் தூதுவர் சென் சுயேயுவேன், அமைச்சர்களான அகிலவிராஜ் காரியவசம், எஸ்.பி. நாவின்ன, பிரதியமைச்சர் அசோக அபேசிங்க, இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்ஸார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a comment