ஆர்ப்­பாட்டம் செய்­தாலும் வழக்கு நட­வ­டிக்­கைகள் வழ­மை­யான முறை­யிலேயே இடம்­பெறும்!

251 0

சிறைக்­கை­திகள் கூரைக்­குமேல் அல்ல, வேறு எங்கு ஏறி நின்று ஆர்ப்­பாட்டம் செய்­தாலும் வழக்கு நட­வ­டிக்­கைகள் வழ­மை­யான முறை­யிலேயே இடம்­பெறும். அதில் மாற்றம் மேற்­கொள்­ள­மு­டி­யாது என நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் தலதா அத்­துக்­கோ­ரள தெரி­வித்தார்.

தாம­த­மா­கிக் ­கொண்­டி­ருக்கும் வழக்கு நட­வ­டிக்­கை­களை துரி­த­மாக்­கு­மாறும் தங்­கு­மிட வச­திகள் மற்றும் ஆகார பான வச­தி­களை ஏற்­ப­டுத்தித் தரு­மா­றும்­கோரி வெலிக்­கடை சிறைச்­சாலைக் கூரைக்­குமேல் ஏறி பெண் சிறைக்­கை­திகள் நேற்று ஆர்ப்­பாட்டம் மேற்­கொண்­டி­ருந்­தனர்.

இது­தொ­டர்­பாக ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளினால் கேட்­கப்­பட்ட கேள்­விக்கு பதில­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறு­கையில்,

வெலிக்­கடை சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்கும் பெண் கைதிகள் சிலர் சிறைச்­சாலைக் கூரைக்­குமேல் ஏறி ஆர்ப்­பாட்டம் செய்­வ­தாக எனக்கு தகவல் கிடைத்­தது. இது தொடர்­பாக சிறைச்­சாலை ஆணை­யா­ள­ரிடம் கேட்ட­றிந்­து­ கொண்டேன். அவர்கள் கூரைக்­குமேல் அல்ல, வேறு எங்கு ஏறி நின்று ஆர்ப்­பாட்டம் செய்­தாலும் வழக்கு நட­வ­டிக்­கைகள் வழ­மை­யான முறை­யிலேயே இடம்­பெறும். அதில் மாற்றம் மேற்­கொள்­ள­மு­டி­யாது.

அத்­துடன் யாருக்கு வேண்­டு­மா­னாலும் ஆர்ப்­பாட்டம் நடத்தும் சுதந்­தி­ரத்தை நாங்கள் நாட்டில் ஏற்­ப­டுத்­திக்­ கொ­டுத்­துள்ளோம். முன்­னர்போல் ஆர்ப்­பாட்டம் செய்­ப­வர்கள் மீது நாங்கள் துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொள்­ள­மாட்டோம். கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி சிறைக்குச் சென்­ற­வர்­களில் 27 பேர் கொலை செய்­யப்­பட்­ட­தற்கு கேள்வி தயா­ரித்­த­துபோல் நாங்கள் கேள்வி தயா­ரிப்­ப­தில்லை. அதனால் நாங்கள் மிகவும் நிதா­ன­மாக சிந்­தித்து இந்த பிரச்­சி­னைக்கு தீர்வை பெற்­றுக்­கொ­டுப்போம்.

அத்­துடன் சிறைச்­சா­லை­க­ளுக்குள் சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கைகள் இன்னும் இடம்­பெற்­று­வ­ரு­வதை அனை­வரும் ஏற்­றுக்­கொள்­கின்­றனர். இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை நான் எப்­ப­டி­யா­வது கட்­டுப்­ப­டுத்­துவோம் என்றார்.

Leave a comment